close
Choose your channels

விஜய்சேதுபதி-பொன்ராம் படம் தொடங்குவது எப்போது?

Wednesday, February 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ ’சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காமெடி ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் என ஜனரஞ்சகமாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நடிகையர் தேர்வு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.