நாளை வெளியாகும் 'அனபெல் சேதுபதி' படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,September 16 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்’ மற்றும் ’லாபம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வாரம் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ‘அனபெல் சேதுபதி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்த படம் நாளை ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் 2 நிமிட ஸ்னீக்பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் டாப்ஸி ஒரு அரண்மனையில் சென்று பார்வையிட்டு கொண்டிருக்கிறார். அப்போது அவர் பின்னாலேயே அரூபமாக ஜெகபதிபாபு செல்கிறார். அவர் உடன் வருவது டாப்ஸிக்கு தெரியவில்லை. கண்ணாடியில் கூட அவரது உருவம் தெரியவில்லை. அது மட்டுமின்றி கண்ணாடியில் வித்தியாசமாக இருப்பதை ஏன் டாப்ஸி உணர்கிறார். 

மேலும் அங்கு உள்ள ஒரு கலையை அவர் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு பூர்வஜென்ம நினைவுகள் வருவது போன்ற காட்சிகள் இந்த இரண்டு நிமிட வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ இந்த படத்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டாப்சி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் ஒளிப்பதிவில், கிருஷ்ண கிஷோர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை நாளை பார்ப்போம்.

More News

'பொன்னியின் செல்வன்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த கார்த்தி!

 பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின்

'ஆட்டம் ஆரம்பம்': 'ருத்ரதாண்டவம்' ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன் ஜி!

இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவான 'திரௌபதி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது

விரைவில் டீசர், 'தல' தீபாவளி: 'வலிமை' அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் இந்த திரைப்படத்தின் டீசர் விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில்

ஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததில் இருந்தே தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் ஒருசில டுவிட்டுக்களை செய்து வருகிறார் என்பதும்

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.