உச்சகட்ட கிளாமரில் சன்னியோன்: விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்!

சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் வெளியிட உள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் சற்று முன் தங்களது சமூக வலைத்தளத்தில் சன்னி லியோன் நடித்த ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

உச்சகட்ட கிளாமரில் சன்னிலியோன் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சன்னி லியோன் கதையின் நாயகியாக முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார் என்பதும் தீபக் மேனன் ஒளிப்பதிவில் அருண் சித்தார்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

More News

4 மொழிகளில் வெளியான விஷால் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

நடிகர் விஷால் நடித்து வரும் படங்களில் ஒன்று 'லத்தி' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

'வாத்தி' இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்: என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷ் நடித்து வரும்  முதல் நேரடி தெலுங்கு திரைப்படமான 'வாத்தி' என்ற திரைப்படத்தின் இயக்குனருக்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

நான் அப்படி சொல்லவே இல்லை, வதந்தியை நிறுத்துங்கள்: பிரபல தமிழ் நடிகையின் டுவிட்!

பிரபல நடிகை ஒருவர் தென்னிந்திய படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் நிலையில் தான் அப்படி சொல்லவே இல்லை என அந்த நடிகை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 

ஜீ5 தளத்தில் அடுத்தடுத்து வெளியாகும் வெற்றிமாறன், கிருத்திகாவின் தொடர்கள்: 

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக

பிக்பாஸ் அல்டிமேட்: இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களும் அதன் பின் ஒருசில வைல்ட் கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்