close
Choose your channels

இவனை மாதிரி ஒரு சைக்கோவை லைஃப்ல பார்த்திருக்கவே மாட்ட... சிந்துபாத் டிரைலர் 

Monday, June 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மனைவியை கடத்தி கடல் கடந்து கொண்டு சென்ற வில்லனிடம் இருந்து மனைவியை காப்பாற்றும் நவீன ராமாயண கதையான இந்த படம் முதல் பாதி ரொமான்ஸ் மற்றும் இரண்டாம் பாதி ஆக்சன் கலந்த படமாகும்.

தாய்லாந்து வில்லன் அறிமுகமாகும் இந்த படத்தில் 'இவனோடு பேரை கேட்டாலே தாய்லாந்துல ஒருத்தன் வாயை திறக்க மாட்டான், அவனுக்கு தண்ணி, தம்முன்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, ஆனா இவனை மாதிரி ஒரு சைக்கோவவ லைஃப்ல பார்திருக்கவே மாட்ட என்ற பில்டப்புடன் அறிமுகமாகிறார் வில்லன்.

விஜய்சேதுபதியின் ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் நடிப்பு, அஞ்சலியின் வழக்கமான கத்தி பேசும் வசனங்கள், வெளிநாட்டு சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவு, யுவனின் பின்னணி இசை ஆகியவை படத்தின் பிளஸ்களாக இருப்பதால் ஒரு நல்ல ரொமாண்டிக் ஆக்சன் படத்தை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.