இந்த உலகத்துக்கு ஒரு பிரச்சனை வந்துருக்கு: விஜய்சேதுபதியின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,December 25 2021]

இந்த உலகத்திற்கு ஒரு பிரச்சனை வந்து உள்ளது என விஜய்சேதுபதி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் என அகில இந்திய நடிகராக மாறி பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பிளாஸ்டிக் பைகளை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த உலகத்தில் நம் எல்லோருக்கும் பிரச்சனை உள்ளது, ஆனால் இப்பொழுது இந்த உலகத்திற்கே ஒரு பிரச்சனை உள்ளது. அதை யாராவது என்றைக்காவது கேட்டிருக்கின்றோமா? இனிமேலாவது கேட்கவேண்டும். உலகத்தில் நாம் வாழ்வதற்கு ஆசையும் கனவும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்த உலகமும் ரொம்ப முக்கியம். நாம் சாப்பாட்டில் உப்பு, மசாலா போட்டு சாப்பிடுவோம், ஆனால் பிளாஸ்டிக் போட்டு சாப்பிடுவோமா? ஆனால் நாம் எல்லோரும் சாப்பிடுகிற சாப்பாட்டில் இந்த பிளாஸ்டிக் கலந்து உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் மண்ணில், தண்ணீரில் கலந்து விலங்கு, மனிதன், பறவை, மீன் எல்லாவற்றையும் பாதிக்கின்றது. நாம் பயன்படுத்தி இரண்டு பொருட்கள் மட்டுமே மக்காது. ஒன்று இந்த உலகத்தில் நாம் செய்த பாவம், இன்னொன்று இந்த பிளாஸ்டிக். பாவத்தை புண்ணியத்தை வைத்து சரி பண்ணி விடலாம், ஆனால் பிளாஸ்டிக்கை எதனாலும் சரி பண்ண முடியாது. இதற்கு தீர்வு என்னவென்றால் நம்முடைய தாத்தா-பாட்டி பயன்படுத்திய மஞ்சப்பை. நம்மால் மாசுபட்ட இந்த உலகத்தை காப்பாற்ற இந்த மஞ்சப்பை மீண்டும் வந்துள்ளது. மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம், பிளாஸ்டிற்கு குட்பை சொல்லுவோம்.
 

More News

விஜய்சேதுபதி-காத்ரினா கைஃப் படம் குறித்த மாஸ் தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் படத்தில் இணைந்த சிம்பு-தனுஷ் பட நாயகி!

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற திரைப்படத்தில் சிம்பு, தனுஷ் பட நடிகை இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்ஃபக்சன் ரூமுக்கு கூப்பிடுவோமா? டுவிஸ்ட் வைத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 82 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்களின்

விஜய் ஆண்டனி திரைப்படத்தில் விஜயகாந்த் நடிப்பது உண்மையா? பிரேமலதா விளக்கம்!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிவரும் திரைப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா

'ஜெய்பீம்' பார்வதிக்கு வீடு கட்டித்தரும் முடிவை திடீரென மாற்றிய ராகவா லாரன்ஸ்: என்ன காரணம்?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் உள்ள ராசாக்கண்ணு கேரக்டர் உண்மையாகவே வாழ்ந்தவர் என்பதும் அவரது மனைவி பார்வதி