close
Choose your channels

தர்பாரில் பிறந்த நாள் கொண்டாடிய 'மாஸ்டர்' விஜய்சேதுபதி!

Thursday, January 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 42வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றான ’துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பின் இடையே இன்று கேக் வெட்டி விஜய்சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ’துக்ளக் தர்பார்’ படக்குழுவினர் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி இன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படக்குழுவினர்களுடனும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்காக இந்த படக்குழுவினர்கள் பிரமாண்டமான கேக்குடன் பிறந்த நாளை கொண்டாட தயாராக இருக்கின்றனர்., இன்று ஒரே நாளில் இரண்டு படங்களின் குழுவினருடன் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.