காதலும் கடந்து போகும்: விஜய்சேதுபதி-சமுத்திரக்கனி கேரக்டர்கள் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Friday,January 29 2016]

'சூது கவ்வும்' படத்தை அடுத்து நலன் குமாரசாமி இயக்கியுள்ள அடுத்த படம் 'காதலும் கடந்து போகும்', விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் சமுத்திரக்கனி நடித்துள்ள கேரக்டர் குறித்த புதிய தகவல்களை இயக்குனர் நலன்குமாரசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவருக்கு வலது கரமாக இருக்கும் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளதாகவும், 'சூதுகவ்வும்' படத்தில் அவர் நடித்த கேரக்டருக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த கேரக்டர் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சமுத்திரக்கனி இந்த படத்தில் போலீசாக நடித்திருப்பதாகவும் இருப்பினும் அவர் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் கொரிய மொழி படமான 'My Dear Desperado' என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகவும் இருப்பினும் தமிழுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் தான் ஒருசில மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டே பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த படம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடும் என்றும் நலன்குமாரசாமி கூறியுள்ளார்.

More News

அஜித் 57' படத்தின் இசையமைப்பாளர்

'வேதாளம்' வெற்றி படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தை இயக்குவது சிறுத்தை சிவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது....

நீதிமன்ற நடவடிக்கையால் 'கதகளி'யில் விஷால் செய்த திடீர் மாற்றம்

நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

'இறுதிச்சுற்று' படம் குறித்த வெளிவராத முக்கிய தகவல்

ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் மாதவன் நடித்துள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

தொடங்குவதற்கு முன்பே விஜய் படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படம் ரிலீஸுக்கு முன்னர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது...

'கெத்து'க்கு வரிவிலக்கு மறுத்தது ஏன்? நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' திரைப்படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது. 'கெத்து'...