கமல் 10, சிவாஜி 9, விஜய்சேதுபதி 8: இது என்ன கணக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,June 18 2017]

கோலிவுட் திரையுலகில் 'தசாவதாரம்' என்ற படத்தின் மூலம் 10 கேரக்டர்களில் நடித்த ஒரே நடிகர் என்ற புகழ் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்னும் உள்ளது. அதேபோல் 'நவராத்திரி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 9 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கமல், சிவாஜியை அடுத்து தற்போது விஜய்சேதுபதி 8 வித்தியாசமான கேரக்டர்களில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆம், இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கி வரும் ;ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இனத்தவர் உள்பட எட்டு வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் ஆறுமுககுமார் இதுகுறித்து கூறியபோது, படத்தின் கதை விஜய்சேதுபதியின் பழங்குடி இன கேரக்டரை மையாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் நகரத்தில் இருந்து காட்டிற்கு மாறுகிறது. மேலும் பழங்குடி இனத்தவர்களின் தனித்துவமான சடங்குகள் இந்த படத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் கதைப்படி விஜய்சேதுபதி விதவிதமான தோற்றங்களில் தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்களுக்காக அவருக்கு மூன்று ஹேர்ஸ்டைல் கலைஞர்களும், மேக்கப் கலைஞர்களும் நியமனம் செய்யப்பட்டிருபதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா கொனிடெலா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

More News

அரவிந்தசாமியின் 'நரகாசுரன்' படத்தில் ரஜினி-தனுஷ் பட நாயகி

'துருவங்கள் 16' என்ற வெற்றி படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது படமான 'நரகாசுரன்' படத்தில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளார் என்பதையும், இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த பட்டியலுடன் கூடிய போஸ்டர் இன்று அரவிந்தசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்...

தமிழ் சினிமாவின் 'அழகன்' அரவிந்தசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகைகளில் எத்தனையோ பேர் அழகிகளாக இருந்தாலும் தமிழ் சினிமாவை பொருத்தவரையும் அழகு, ஸ்மார்ட், ஸ்டைல் உள்ள நடிகர்களில் மிகச்சிலரில் ஒருவர் அரவிந்தசாமி என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை...

64வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது பெற்ற நட்சத்திரங்கள். முழு விபரம்

தேசிய விருதை அடுத்து திரை நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் ஒரு விருது என்றால் அது பிலிம்பேர் விருதுதான்...

நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் வழக்கு, முறைப்படி இன்று நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.

குடியரசு தலைவராக மீண்டும் ஒரு விஞ்ஞானி?

இந்திய குடியரசு தலைவர்களில் பெஸ்ட் யார் என்று கேட்டால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது அப்துல்கலாம் அவர்கள் தான். முதன்முறையாக ஒரு விஞ்ஞானி, எந்த கட்சியையும் சார்பில்லாத ஒரு குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாடே பெருமை அடைந்தது...