பேனர் விவகாரம்: சூர்யா, தனுஷ் ரசிகர்களை மிஞ்சிய விஜய்சேதுபதி ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,October 05 2019]

பேனர் கலாச்சாரத்தால் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில் இந்த மரணத்திற்கு பின் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகளும், மாஸ் நடிகர்களும் அறிவித்தனர். இனிமேல் தங்களுடைய படம் வெளியாகும்போது பேனர் வைக்க வேண்டாம் என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுமே தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் வெளியானபோது பேனர் வைப்பதற்கு பதிலாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அவரது ரசிகர்கள் ஹெல்மெட்டுக்களை இலவசமாக அளித்தனர். அதேபோல் தனுஷின் ‘அசுரன்’ திரைப்படம் வெளியானபோது, அவரது ரசிகர்கள் திருநங்கைகளுக்கு தையல் மிஷின்களை கொடுத்து உதவினர்

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் ஒரு விவசாயியின் நிலத்தில் நெல் பயிரிடுவதற்கு தேவையான செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரகாஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் அனைத்து செலவுகளையும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏற்றுள்ளதால் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது

 

More News

புதிய லுக்குடன் அஜித் சென்றது எங்கே தெரியுமா?

நேற்று சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர்.

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு: பொங்கி எழும் திரையுலகினர்

மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட விவகாரத்தில் அவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் 3 சீசன் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3, டைட்டில் வின்னர் யார் என்பது நாளை இரவு தெரிந்துவிடும். வெற்றியாளரை தேர்வு செய்ய வாக்குகள் பதிவு செய்யப்படுவது நேற்றுடன்

'தளபதி 64': நண்பர்களுக்கு கைகொடுத்த தளபதி விஜய்!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருடைய தீவிர ரசிகரும்,

'தல' நியூலுக்: வைரலாகும் அஜித்தின் இளமை தோற்றம்

தல அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ள 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது