close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்

Wednesday, October 26, 2016 • தமிழ் Comments

இந்த வருடம் மிக அதிக திரைப்படங்களை வெளியிட்டு அனைத்தையும் வெற்றிப்படமாக்கிய நாயகன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள இன்னொரு படம் 'மெல்லிசை'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை சமீபத்தில் பார்த்த விநியோகிஸ்தர் ஒருவர் இந்த படம் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லிங் ஆக இருப்பதால் இந்த படத்திற்கு 'மெல்லிசை' என்ற சாஃப்ட் ஆன டைட்டிலுக்கு பதில் வேறு டைட்டில் வைக்கலாம் என ஆலோசனை கூறினாராம்.
இதனை பரிசீலித்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி மூடுபனி, நெற்றிக்கண், புரியாத புதிர் உள்ளிட்ட ஒருசில டைட்டில்களை பரிசீலனை செய்து இறுதியில் 'புரியாத புதிர்' என்ற டைட்டில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரகுவரன், ரேவதி நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கதில் கடந்த 1990ஆம் ஆண்டு இதே டைட்டிலில் ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டைட்டிலுக்காக கே.எஸ்.ரவிகுமார் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் படக்குழுவினர் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz