விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்'. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்
2016ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்', 'இறைவி', 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை', 'றெக்க' ஆகிய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் திருப்திகரமான வசூலை கொடுத்தது.
தற்போது 2017ஆம் ஆண்டின் முதல் விஜய்சேதுபதி படமான வரும் பொங்கல் திருநாளில் 'புரியாத புதிர்' வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
'புரியாத புதிர்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் 124 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 4 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் ஆக உள்ளது.
விஜய்சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், சோனியா தீப்தி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ளார். சைக்காலஜீக்கல் த்ரில்லர் படமான இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். ரெபல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பவன்ஸ்ரீகுமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.