close
Choose your channels

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' சென்சார் தகவல்கள்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

Tuesday, May 20, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த ‘ஏஸ்’ என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவான ‘ஏஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணியும் முடிவுக்கு வந்து மே 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 156 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 36 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. ஒரு பக்கா ஆக்சன் படத்திற்கு தேவையான சரியான ரன்னிங் டைமாக இந்த படம் இருப்பதால் இந்த படம் வெற்றி அடைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்த ‘ஏஸ்’ என்ற திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கி இருந்தார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சிங்கப்பூரில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment