விஜய்சேதுபதியின் 'அனபெல்லா சேதுபதி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாக இருப்பதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் திரையரங்குகளிலும் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி மற்றும் அனபெல்லா சேதுபதி ஆகிய திரைப்படங்கள் ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த ’அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் சேதுபதியின் ’அனபெல்லா சேதுபதி’ படத்தின் நாயகியான டாப்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பழம்பெரும் இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்சேதுபதி, டாப்சி, ராதிகா, யோகி பாபு, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரைப்படத்தில் கால் பதிக்கும் சீரியல் நடிகை....! அதுவும் பிரபல ஒளிப்பதிவாளரின் கூட்டணியில்....?

தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் தான் அனன்யா

கணவரைக் கட்டிபிடித்தப்படி “ஸ்கை டைவ்“ அடித்த பிரபல நடிகை… வைரல் வீடியோ!

தமிழில் நடிகர் ஆர்யாவின் தம்பி நடிகர் சத்யா நடித்த திரைப்படமான “அமரகாவியம்” திரைப்படத்தில்

கைக்குழந்தையுடன் நடிகை நயன்தாரா, அருகில் காதலர்? மிரண்டுபோன நெட்டிசன்ஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய கையில் குழந்தை ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம்

11 இயக்குனர்களின் தயாரிப்பில் முதல் படம்: ஹீரோ இந்த பிரபலமா?

பிரபல இயக்குனர்கள் பதினோரு பேர் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்கள் என்றும் இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக

'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பு நிறுவனத்துடன் சுதா கொங்காரா ஒப்பந்தம்? ஹீரோ யார்?

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க இருக்கும் அடுத்த படம் என்ன? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் தற்போது அதுகுறித்த புதிய அப்டேட் வந்துள்ளது.