விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைமுன்னோட்டம்

  • IndiaGlitz, [Sunday,September 24 2017]

கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழ் திரையுலகினர்களின் பார்வை ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு குறித்து உருவாகி வரும் சுமார் அரைடஜன் படங்களில் ஒன்று விஜய்சேதுபதியின் 'கருப்பன்'. வரும் 29ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்

'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, தான்யா, கிஷோர், பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்த படத்தில் நடித்தது குறித்து விஜய்சேதுபதி கூறியபோது, 'இது ஒரு கமர்சியல் படம். எனக்காக பாபி சிம்ஹாவும் இதில் நடித்திருக்கிறார். பெரிய மீசை வைத்து நடித்திருக்கிறேன். மாடு பிடி காட்சிகளுடன் என்னையும் இணைத்து அழகாக படமாக்கி இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

தான்யா கூறும்போது, “மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மதுரை பெண்ணாகவே மாறி நடித்திருக்கிறேன். எனது நடிப்பை வெளிப்படுத்த இந்த படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது” என்று தெரிவித்தார்.

ஏ.எம்.ரத்னம், “இது பன்னீர்செல்வம் இயக்கத்தில் சிறந்த படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்று கூறினார்.

இந்த படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் இந்த படம் குறித்து கூறியபோது, 'நான் பேருந்திற்காக காத்திருந்து தளர்ந்து போன சமயத்தில் எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது. ஓட்டுநராக விஜய் சேதுபதியும், நடத்துநராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம்.

'கருப்பன்' கதையை வைத்துக் கொண்டு பல்வேறு நடிகர்களிடம் சென்றேன். பலரும் கதையைக் கேட்பதற்கே தயாராக இல்லை. ஒரு நாள் சீனு ராமசாமி போன் செய்து, இக்கதை விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக இருக்குமா எனக் கேட்டார். கச்சிதமாக இருக்கும் என்றவுடன் நாளைக்கு வருமாறு சொன்னார். அப்போது 'தர்மதுரை' டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதல் சந்திப்பிலேயே 'ரேணிகுண்டா' படத்தின் பாடல்களை தற்போதும் கேட்டு வருவதாக விஜய் சேதுபதி கூறினார். அதனைத் தொடர்ந்து முழுக் கதையையும் கூறி, படம் தொடங்கப்பட்டது.

பலரும் இயக்குநர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாக கூறுவார்கள். ஆனால், இப்படத்தில் விஜய் சேதுபதியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பல நடிகர்களோடு பணிபுரிந்திருக்கிறேன், ஆனால் விஜய் சேதுபதி போன்று கதையில் முழு கவனமும் கொண்ட நடிகரைப் பார்த்ததில்லை. இப்படம் ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்கு முன்பே தொடங்கப்பட்டது. இப்படத்துக்கு ஜல்லிக்கட்டும் சம்பந்தமில்லை.

டி.இமான் இசையில் ஐந்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். ஏற்கனவே ஐந்து பாடல்களும் ஹிட் என்றாலும் 'கருவா கருவா பயலே' பாடல் அனைத்து எப்.எம். வானொலிகள் உள்பட பட்டிதொட்டியெங்கும் ஹிட்டகியுள்ளது.

கவண்', 'விக்ரம் வேதா' என தொடர் வெற்றிகளை இந்த ஆண்டு பெற்று வரும் விஜய்சேதுபதிக்கு மீண்டும் ஒரு வெற்றியை 'கருப்பன்' தருவான்' என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அந்த நம்பிக்கையுடன் இந்த படத்தின் விமர்சனத்தோடு வரும் வெள்ளியன்று சந்திப்போம்

More News

நொய்யல் ஆற்றின் நுரைக்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்: தமிழக அமைச்சர்

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்': திரை முன்னோட்டம்

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் ஸ்பைடர்'. நம்மூர் விஜய்க்கு சமமாக தெலுங்கில் பிரபலமான மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்

'இமைக்கா நொடிகள்' சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

'பாகுபலி'யுடன் கனெக்சன் ஆகும் மகேஷ்பாபு

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் என்னவாக இருக்கும், அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க கொடுத்து வைத்திருக்கும் நாயகன் யார்? என்ற கேள்விகள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டிருக்கும் நிலையில்

இணையதளங்களை பரபரப்பாக்கியுள்ள சிம்புவின் புதிய தோற்றம்

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதில் ஒன்று அவருடைய உடல் எடை என்றும் கூறப்படுவதுண்டு.