close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: நீண்ட காத்திருப்புக்கு முடிவு!

Wednesday, October 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த படங்களில் ஒன்று நீண்டகாலமாக திரையிடப்படாமல் கால தாமதமாகி வந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது. நீண்டகாலமாக கிடப்பில் இருந்த விஜய்சேதுபதியின் படம் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி, விவேக், ரித்விகா, மோகன்ராஜா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையில், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.