'மாமனிதன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: ஆனால் இம்முறை ரசிகர்களுக்கு சந்தோஷம்!

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ திரைப்படம் ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ், ஜூன் 24ஆம் தேதி ’மாமனிதன்’ படம் வெளியாகும் என அறிவித்தார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஜூன் 23 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஒரு நாள் முன்னதாகவே ’மாமனிதன்’ படத்தை பார்க்க இருப்பதையடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்திருக்கும் இந்த படத்தில் ‘ஜோக்கர்’ புகழ் குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

More News

நடிகை சதாவா இவர்? 38 வயது என நம்பவே முடியவில்லை!

நடிகை சதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 38 வயதாகும் சதாவா இவர்? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் .

20 வருடங்களுக்கு பின் அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகர்: 'தல' என பெயர் வைத்தவர் இவர்தான்!

நடிகர் அஜீத்துக்கு 'தல' என்று பெயர் வைத்த நடிகர், அஜித் படத்தில் 20 வருடங்களுக்குப்பின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரையிட்ட தியேட்டருக்கு அபராதம்: என்ன காரணம்?

வினேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு  காதல்' என்ற திரைப்படத்தை திரையிட்ட தியேட்டருக்கு ரூபாய் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு

மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பா? படக்குழுவினர் விளக்கம்!

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர் 

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரபல நடிகர் படத்தின் டிரைலர் ரிலீஸ்!

2022ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பிரபல நடிகர் நடித்த படத்தின் டிரைலர் கிரிக்கெட் மைதானத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.