close
Choose your channels

'சங்கத்தமிழன்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்துடன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’, கார்த்தியின் ‘கைதி’ உட்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்னரே ரிலீசாகி விடும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் சங்கத்தமிழன் படப்பிடிப்பின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாகவும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ’சங்கத்தமிழன்’, திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் வரும் தீபாவளி அன்று விஜய்யின் ’பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி’ ஆகிய திரைப்படங்கள் மட்டுமே வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் ராகுல் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று ஆகும்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz