close
Choose your channels

விஜய், ரஜினிக்கு நடுவில் புகுந்த விஜய்சேதுபதி

Saturday, October 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் அதாவது நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் நவம்பர் 29ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 6க்கும், நவம்பர் 29க்கும் இடையில் நவம்பர் 16ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள விஜய்சேதுபதி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.