இரண்டாம் பாகமாகும் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம்.. விரைவில் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் சேதுபதி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும், அதற்கான கதையை இயக்குனர் விரைவில் எழுத இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில், நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றி படம் என்பதும், இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 20 கோடி என்ற நிலையில் 190 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டுமல்ல, இந்த படம் சீனாவிலும் வெளியானது என்பதும், அங்கும் நல்ல வசூலை குவித்தது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ’ட்ரெயின்’, பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஒரு படம், ’காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர் என வரிசையாக கைவசம் படங்கள் வைத்திருந்தாலும், நிதிலன் சாமிநாதனிடம் ’மகாராஜா 2’ படத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இருந்தால், அதற்காக முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், இயக்குனரும் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
எனவே விரைவில் விஜய் சேதுபதி நடிப்பில் ’மகாராஜா 2’ திரைப்படம் உருவாகும் என்றும், அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com