close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 'சங்கத்தமிழன்', 'லாபம்', 'மாமனிதன்' உட்பட ஒரே நேரத்தில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படம் 'சயிர நரசிம்ம ரெட்டி'. அமிதாப்பச்சன் சிரஞ்சீவி, கிச்சா சுதீப், உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் விஜய்சேதுபதி நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்கும் படக்குழுவினர்களின் அபாரமான பணி வியக்க வைக்கும் அளவுக்கு இந்த வீடியோவில் உள்ளது

இந்த நிலையில் இந்த வீடியோவின் இறுதியில் இந்த படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஆகஸ்டில் 20ஆம் தேதி டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தில் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, உள்பட முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். ராம்சரண் தேஜா தயாரித்து வரும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.