கமலுக்கு அடுத்த இடத்தில் விஜய்சேதுபதியை பார்க்கிறேன். மாதவன்

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென தியேட்டர் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படம் குறித்தும் விஜய்சேதுபதியுடன் நடித்தது குறித்தும் மாதவன் கூறியபோது, நானும் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் எதிரெதிர் கேரக்டர்களில் நடித்துள்ளோம். எனவே படப்பிடிப்பு முடியும் வரை அவரை நேரில் சந்தித்து பேச வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். அப்போதுதான் காட்சிகள் இயல்பாக வரும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை.

தன்னுடைய கேரக்டர் மட்டும் நன்றாக வரும் என்று விஜய்சேதுபதி நினைத்திருந்தால் இந்த படம் வேற மாதிரி வந்திருக்கும். ஆனால் கமல் எப்படி என்னிடம் நடந்து கொண்டாரோ, அதே மாதிரி விஜய்சேதுபதி மிகவும் பக்குவத்துடன் நடந்து கொண்டார். இப்போது என்னுடைய நண்பர்கள் லிஸ்ட்டில் விஜய்சேதுபதியும் ஒருவர் என்று கூறினார்.

More News

அன்பானவர் அசராதவர் பிரமாதமானவர்: அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல்

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்து கொண்டிருக்கும் பெருமையை பெற்றவர் காஜல் அகர்வால். மேலும் கோலிவுட்டின் இன்னொரு முக்கிய நடிகரான சூர்யாவுடனும் நடித்தவர்...

முதலில் கோரிக்கை வைப்போம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி டுவீட்டுக்கு கமல் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கேளிக்கை வரியை ரத்து செய்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளிகளை தமிழக அரசு காக்க வேண்டும் என்று தனது டுவிட்டரின் மூலம் கேட்டுக்கொண்டார்.

நிஜத்தில் 'ஹீரோ'வாக மாறிய 'தெறி' வில்லன்

தளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் தீனா

ரஜினியின் ட்வீட்டால் அடித்துக்கொள்ளும் விஜய்-அஜித் ரசிகர்கள்

தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்து வரும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி பிரச்சனைக்கு அனைத்து திரையுலகினர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பீர் ஆரோக்கிய பானம் என்றால் மருந்துக்கடையில் விற்பீர்களா? அமைச்சருக்கு பிரபல நடிகை கேள்வி

தமிழகம் போலவே நமது அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்திலும் மதுவுக்கு எதிராக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன...