close
Choose your channels

இரண்டு மொழிகளில் ரீமேக் ஆகிறது விக்ரம் வேதா;

Saturday, July 29, 2017 • தமிழ் Comments

இந்த ஆண்டின்  முதல் பாதியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் 'பாகுபலி 2' என்றால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அமோக வசூலை குவித்த படம் 'விக்ரம்  வேதா' என்று கூறலாம்
 
ஜிஎஸ்டியால் கட்டண உயர்வு, ஆன்லைன் பைரசி, திருட்டு டிவிடி ஆகிய தடைகளையும் தாண்டி அதிக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது விக்ரம் வேதா
 
இந்த நிலையில் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர்களில் ஒருவர் கூறியபோது, ' "ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே தயாரிப்பாளர் யாரிடமும் எந்தவொரு உரிமையையும் விற்கவில்லை" என்று தெரிவித்தார்.
 
தெலுங்கில் விஜய்சேதுபதியும், இந்தியில் மாதவனும் அவரவர் கேரக்டரில் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz