close
Choose your channels

தமிழக முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி: காரணம் இதுதான்!

Tuesday, June 15, 2021 • தமிழ் Comments

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சற்று முன்னர் தலைமைச் செயலகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சந்தித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக அரசு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு திரையுலக பிரமுகர்கள் கொரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் உள்பட பல நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் சற்று முன்னர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Get Breaking News Alerts From IndiaGlitz