அஜித்துடன் சந்திப்பு. அப்செட் ஆன விஜய்சேதுபதி மனைவி

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

தல அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்பதாலே அவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். மேலும் திரையுலகிலும் அதிக ரசிகர்களை கொண்டவர் அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் 'விவேகம்' படப்பிடிப்பில் இருந்த அஜித், விஜய்சேதுபதியை சந்திக்க விரும்பி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அஜித்திடம் இருந்து வந்த அழைப்பால் இன்ப அதிர்ச்சி ஆன விஜய்சேதுபதி உடனே 'விவேகம்' படப்பிடிப்பின் இடையே அவரை சந்தித்து பேசினர்

இந்த சந்திப்பின்போது 'விஜய்சேதுபதி சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாகவும், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருப்பதாகவும் அஜித் விஜய்சேதுபதியை பாராட்டியதோடு, தொடர்ந்து இந்த மூன்றையும் பின்பற்றும்படி அறிவுரை கூறினாராம்

அஜித்தின் தீவிர ரசிகையான விஜய்சேதுபதியின் மனைவி, அஜித் சந்திப்பின்போது தன்னை அழைத்து செல்லவில்லை என்று கணவர் மீது கோபப்பட்டு அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது.

More News

சிம்பு இசையில் பாடிய டி.ராஜேந்தர்-உஷா தம்பதி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகம் செய்த நடிகர் சிம்பு, அவர் ஹீரோவாக நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' என்ற படத்திற்கு இசையமைத்தும் வருகிறார். சிம்பு இசையமைக்கும் முதல் படமான இந்த படத்தில் ஏற்கனவே அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பதை பார்த்த

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தின் டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் சிவாஜி கணேசனை குறிப்பிடுவது போல நடிகையர் திலகம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகை சாவித்திரி தான். இன்றும் கூட பல நடிகைகள் சாவித்திரியின் நடிப்பை பின்பற்றி நடித்து வருகின்றனர்...

2 முக்கிய பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறிய கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தாலும் நேற்று பெங்களூரில் முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது....

ரூ.50 மினிமம் பேலன்ஸ், பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை. வங்கிகள் கெடுபிடியால் மவுசு கூடிய அஞ்சலகங்கள்

தனியார் வங்கிகள் மட்டுமின்றி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் மினிமம் பேலன்ஸ் உள்பட பல்வேறு நிபந்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு விதித்து வருகிறது. சேமிப்பு கணக்குகளில் ரூ.5000 மினிமம் பேலன்ஸ் மற்றும் 4 முறைக்கு மேலான பரிவர்த்தனைக்கு கட்டணம் என புதிய நிபந்தனைகளை வங்கிகள் சமீபத்தில் அறிவித்தன...