விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் 2 ஹீரோக்கள்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,January 24 2024]

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் தமிழ் திரை உலகின் இரண்டு ஹீரோக்கள் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் வெளியானது. இதில் ஒரு பகுதியை இயக்கியவர் பிஜாய் நம்பியார் என்பதும் ’எதிரி’ என்ற டைட்டில் கொண்ட அந்த பகுதியில் விஜய் சேதுபதியின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிஜாய் நம்பியாரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது இந்த படத்திற்கு ’போர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் நாயகர்களாக அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சஞ்சனா நடராஜன் இந்த படத்தின் நாயகி ஆக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தக்லைஃப்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்

ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா.. என்னென்ன சேஷங்கள்?

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல்

டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்த ரம்பா மகள்.. தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின் ரெடியா?

நடிகை ரம்பாவின் மகள் சமீபத்தில் டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்த நிலையில் அவரது குடும்பத்தில் நிகழ்ந்த பூஜை ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'STR48'ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி இதுவா?  சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை விருந்து..!

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

'கோட்' படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.. வெங்கட்பிரபுவுடன் எடுத்த புகைப்படம் வைரல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜித் படத்தில் நாயகியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்