close
Choose your channels

விஜய் சேதுபதி- நயன்தாரா பீரியட் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

Tuesday, August 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150' கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று அவருடைய பிறந்த நாள் அன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்திய விடுதலை போராட்டத்திற்காக போரிட்ட 'ரெனாட்டி சூர்யாடு' அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படத்திற்கு 'செயரா நரசிம்ம ரெட்டி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தை ராம்சரண் தேஜா தயாரிக்கின்றார். இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.