அமேசானில் விஜய்சேதுபதியின் புதிய வெப்தொடர்: இயக்குனர்கள் யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன்’ வெப்தொடரை இயக்கிய ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகும் புதிய தொடரில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு ‘ஃபர்ஜி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் காவல்துறை அதிகாரியாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடிக்கின்றனர்
இந்த தொடரில் மேலும் ராஷிகண்ணா, ரெஜினா, கேகே மேனன், அமோல் பலேகர், உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.