close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பாளர்!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், அந்த படம் ரிலீஸுக்கு முன்னரே மேலும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படம் ‘மும்பைகார்’ . இந்த படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் என்பது தெரிந்ததே. இந்த படத்தை ’சாமி 2’ உள்பட பல படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் இன்னொரு திரைப்படத்தையும் சிபு தமீன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஆறுமுககுமார் இந்த படத்தை இயக்கவிருப்பதாகவும், இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.