விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி.. போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக புதிய போஸ்டர் உடன் வெளியாகியுள்ளது. இதை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி என்பதும், ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவர் அவ்வப்போது நடித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான அவரது ’மகாராஜா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அவர் தற்போது ’ஏஸ்’ ’ட்ரெயின்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், ’ஏஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 23 என சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பப்லு பிருத்விராஜ் உட்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகிய இந்த படத்தை 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
BrACE yourself - The ultimate action spectacle is here #ACE hits theatres on May 23 - Prepare for the Ride of 2025! #ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat @andrews_avinash @rajNKPK… pic.twitter.com/DZk4coWcMJ
— VijaySethupathi (@VijaySethuOffl) April 19, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments