close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் முதல் முதலாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் ’துக்ளக் தர்பார்’, அனபெல்லா சேதுபதி ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் ’மும்பைகார்’. இந்த படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி விக்ராந்த் மாஸே உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் நேரடியாக இரண்டு முன்னணி ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.