close
Choose your channels

அவங்க நம்மள மாதிரி நார்மல் பீப்பிள் கிடையாது: விஜய் சேதுபதி - நித்யா மேனன் படத்தின் 2 நிமிட வீடியோ..!

Sunday, May 4, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சுமார் இரண்டு நிமிட டீசர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த டீசரில் தான் படத்தின் தலைப்பு "தலைவன் தலைவி" என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் தமிழில் முதல் முறையாக இணையும் இப்படத்தில், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் இரண்டு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் முட்டை பரோட்டா போடுகின்றனர். சாதாரணமாக பேச தொடங்கும் இருவரும், பின்னர் சண்டை போடும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதனால், இருவருக்குள் உள்ள காதல் தெளிவாக தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இப்படம், ஆரம்பத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் ஆக ஆரம்பித்து, பின்னர் ஆக்‌ஷனாக மாறும் என்பது டீசரில் தெளிவாக தெரிகிறது.

மொத்தத்தில், இந்த டீசர் வெளியீடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment