சுயமரியாதை திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட விஜய்சேதுபதி.. யாருடைய திருமணம் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 04 2023]

சென்னையில் நடந்த சுயமரியாதை திருமணத்தில் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் சுயமரியாதை திருமணம் அதிகம் நடைபெற்று வருகிறது. ஜாதி, மதம் பார்க்காமல் ஆடம்பரம் இல்லாமல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, எந்த விதமான சடங்கு சம்பிரதாயம் இல்லாமல் நடைபெறும் திருமணங்களை சுயமரியாதை திருமணம் என்று கூறி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் குமரன் என்பவரின் திருமணம் நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் சென்று மணமக்களை வாழ்த்தினார். விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மனைவி ஜெஸ்ஸி ஆகிய இருவரும் மணமக்களை வாழ்த்தும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மட்டுமின்றி போது மேடையிலும் புரட்சிகரமான கருத்துக்களை விஜய் சேதுபதி பேசிவரும் நிலையில் தனது ரசிகரின் சுயமரியாதை திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.