விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

  • IndiaGlitz, [Tuesday,October 11 2016]

இந்த ஆண்டின் கோலிவுட் வெற்றி நாயகன் என்றால் அது விஜய்சேதுபதி என்று உடனே கூறிவிடலாம். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அவர் நடிப்பில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஆறு படங்கள் வெளிவந்துள்ளது. இன்னும் 'இடம் பொருள் ஏவல்' மற்றும் மெல்லிசை' விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஜய்சேதுபதி தயாரித்த 'ஆரஞ்சு மிட்டாய்' திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாவது தயாரிப்பாக 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற படத்தை அவர் தயாரித்து வருகிறார்.
லெனின் பாரதி இயக்கி வரும் இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படம் தற்போது கேரளாவில் நடைபெறவுள்ள 21வது சர்வதேச கேரள திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வு பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் உயர்ந்த மனிதநேயத்திற்கு மேலும் ஒரு உதாரணம்

'தல' அஜித்தின் நடிப்பை பலர் விமர்சனம் செய்தாலும் அவரது மனித நேயத்தை இதுவரை அவரது எதிரிகள் உள்பட யாரும் தவறாக விமர்சனம் செய்ததே இல்லை...

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தேதி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

'2.0' படக்குழுவின் முக்கிய விழாவில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது என்பதையும்,

இயக்குனர் விஜய்க்கு தனுஷ் வாழ்த்து

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ஊடகங்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது...

அஜித் சர்ச்சை குறித்த கருத்துக்கு சிம்பு விளக்கம்

சிம்புவுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றில் பெரும்பாலான சர்ச்சைகள் அவர் மனதில் நினைத்து ஒரு விஷயத்தை கூறியிருப்பார்....