close
Choose your channels

சின்னத்திரை பிரபலத்தின் பட டீசரை வெளியிட மறுத்த விஜய்சேதுபதி! காரணம் என்ன?

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு நடிகரின் பட டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவற்றை இன்னொரு நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் வழக்கம் தற்போது கோலிவுட்டில் அதிகமாகி வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமான அசார் நடிக்கும் படம் ஒன்றின் டீசரை இன்று விஜய்சேதுபதி வெளியிடவுள்ளதாக இருந்தது. இந்த படத்தின் டைட்டில் 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்'. ஆனால் இன்று சென்னை நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரில் 'கடலை'யை நீக்கிவிட்டு '----போட ஒரு பொண்ணு வேணும்' என்று குறிப்பிடப்படப்பட்டிருந்தது. இந்த் போஸ்டரை கண்ட பலர் முகம் சுழித்ததோடு, இதுபோன்று அருவருப்பான ஆபாசமான டைட்டில் கொண்ட படத்தின் டீசரை விஜய்சேதுபதி வெளியிடலாமா? என சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இப்படி ஒரு மட்டமான விளம்பரம் செய்த படக்குழுவினர்களை கண்டித்த விஜய்சேதுபதி, இந்த படத்தின் டீசரை வெளியிட மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.