close
Choose your channels

அனுஷ்கா படத்தின் புரமோஷனுக்கு உதவிய விஜய் சேதுபதி! ஆச்சரிய தகவல் 

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கிய ‘க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

அதே தினத்தில் அனுஷ்காவின் ’நிசப்தம்’ திரைப்படமும் மற்றொரு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஓடிடி தளத்தில் ஒரே நாளில் இரண்டு பிரபலங்களின் படங்கள் ரிலீசாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனுஷ்காவின் ’நிசப்தம்’ படத்தின் டிரைலரை வெளியிட விஜய்சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளார். நாளை மதியம் ஒரு மணிக்கு இந்த படத்தின் டிரைலரை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய படத்திற்கு போட்டியாக வரும் படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு, உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.