'எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா': விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்!

  • IndiaGlitz, [Friday,October 09 2020]

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’எனக்கு இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் கொண்ட டிசர்ட்டுகளை பிரபல திரையுலக நட்சத்திரங்கள் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது தான் அடங்கி உள்ள நிலையில் இன்று விஜய் சேதுபதி வெளியிட்ட திரைப்பட பர்ஸ்ட் லூக் போஸ்டர் ஒன்றில் ’எனக்கு ஹிந்தி தமிழ் தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’ என்ற வாசகம் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள அடுத்த படம் ’பேய்மாமா’. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் எனக்கு இந்தி தமிழ் தெலுங்கு எதுவுமே தெரியாது போடா என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில், ராஜ் ஆர்யன் இசையில் ப்ரீதம் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உண்மையிலேயே நீங்க மிகப்பெரிய டைரக்டர்: 'விருமாண்டி'க்கு சல்யூட் அடித்த பிக்பாஸ் நடிகர்!

சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்த நிலையில் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சென்றாயன்

'மாநகரம்' இந்தி ரீமேக்கில் மக்கள் செல்வன்: பரபரப்பு தகவல்

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான 'மாநகரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும், இந்த வெற்றியால் தான் அவருக்கு 'கைதி' திரைப்பட வாய்ப்பு கிடைத்தது

ஸ்ருதிஹாசனை அடுத்து அக்சராஹாசனுக்கு உதவும் கமல்!

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் ஏற்கனவே அமிதாப், தனுஷ் நடித்த 'ஷமிதாப்', அஜித் நடித்த 'விவேகம்', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்'

அமைதிக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற ஐ.நா….

2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் கடந்த 5 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

சினிமாவில் இருந்து விலகுவதாக சிம்பு பட நாயகி அறிவிப்பு!

சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' மற்றும் 'தம்பிக்கு இந்த ஊரு' 'பயணம்' 'ஆயிரம் விளக்கு' 'தலைவன்' மற்றும் விஷாலின் 'அயோக்யா' உள்பட தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை சனாகான்.