'விக்ரம்' படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள்: வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறிய விஜய்சேதுபதி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளின் வீடியோவை வெளியிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிந்த அன்பறிவ் என்ற இரட்டையர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்பட பலரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்’. அனிருத் இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்களின் பிறந்தநாளை அடுத்து அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ள விஜய் சேதுபதி, 'விக்ரம்’ படத்தில் அன்பறிவ் அமைத்த ஸ்டண்ட் காட்சிகளின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் தேதியை அறிவித்த உதயநிதி ஸ்டாலின்!

தனுஷின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

'தளபதி 66' படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்: வேறு யார் யாரெல்லாம் நடிக்குறாங்க?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் ஆகிய இருவரும் இணைந்ததாக சற்றுமுன் பார்த்த நிலையில் தற்போது மேலும் சிலர் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

'கேஜிஎப் 3' படத்தின் வில்லன் இந்த பிரபல நடிகரா?

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கேஜிஎப் 3' படத்தின் வில்லனாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்? ஸ்ருதிகா விளக்கம்

'குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த வாரம் சனி ஞாயிறு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஸ்ருதிகா மற்றும் அம்மு அபிராமி ஆகிய இருவருமே

தோனி படத்தில் நயன்தாரா? ரஜினிக்கு நெருக்கமானவரின் மெகா திட்டம்!

தல தோனி தயாரிக்கும் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் ரஜினிக்கு நெருக்கமானவரின் மெகா திட்டம் இது என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.