close
Choose your channels

யோகிபாபுவுக்கு உதவிய விஜய்சேதுபதி

Wednesday, January 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு யோகிபாபு முன்னணி வேடத்தில் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஜோம்பி. இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

த்ரில் மற்றும் காமெடியுடன் கூடிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பகக்த்தில் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் புவன் இயக்கவிருக்கும் 'ஜோம்பி' படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கவுள்ளார். 'ஜோம்பி'யை அடுத்து 'தர்மபிரபு', 'கூர்கா ஆகிய படங்களிலும் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.