'துளி கூட நல்லவன் கிடையாது': 'மாஸ்டர்' கேரக்டர் குறித்து மனம் திறந்த விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்தவுடன் திரை அரங்குகள் திறந்த உடன் வெளியாகும் முதல் திரைப்படம் ’மாஸ்டர்’ திரைப்படம் ஆகத்தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது தான் இந்த படத்தின் ஹைலைட் என்பது அனைவரும் தெரிந்ததே. விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பை திரையில் பார்க்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது வில்லன் கேரக்டர் குறித்து அவர் மனம் திறந்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்., ’மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க தனது கேரக்டர் வில்லன் என்றும் துளிகூட நல்லவன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இது போன்ற கேரக்டர்களில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் தனது கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி இந்த கருத்தை வைத்துப் பார்க்கும் போது இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் விஜய் சேதுபதியின் வில்லன் கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திடீரென காலியான பிரதமர் மோடியின் 'வெய்போ' அக்கவுண்ட்: என்ன காரணம்?

சீனாவின் 'வெய்போ' என்ற சமூக வலைதளம் டுவிட்டருக்கு இணையானது என்பதால் அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தனது அக்கவுண்ட்டை தொடங்கினார்.

டிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து!

டிக் டாக்கில் புகழ் பெற்ற இலக்கியா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச பதிவுகளை டிக்டாக்கில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே.

காரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

உலகின் வயதான ஹீரோ என்ற புகழ்பெற்ற நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்த 'தாதா 87' என்ற திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மது கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில்

தமிழகம் முழுவதும் மூடப்படுகிறது டாஸ்மாக்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்றும் 5வது நாளாக 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது