பழைய ஐடென்டிட்டியை அழிச்சிட்டு சாதாரணமா வாழ போறேன்: விஜய்சேதுபதியின் 'ஏஸ்' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவான ‘ஏஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் இந்த படம் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்த ‘ஏஸ்’ என்ற திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கி இருந்தார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சிங்கப்பூரில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியான நிலையில், இந்த மூன்று நிமிட ட்ரெய்லரில் இருந்து இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது தெரியவந்துள்ளது.
'போல்டு குமார்' என்ற கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதி மர்மமான முறையில் காய் நகர்த்தி வரும் நிலையில், அவரது பிளான் என்ன என்று தெரியாமல் அவருடன் ருக்மணி வசந்த், யோகி பாபு உள்ளிட்டோர் பழகுகின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. இந்த படம் மே 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், "மகாராஜா" திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் இன்னொரு வெற்றி படமாக ‘ஏஸ்’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments