'மாஸ்டர்' படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகளுக்கு மக்கள் வருவதற்கே பயப்பட்ட நிலையில் விஜய்யின் ’மாஸ்டர்’ படம் மக்கள் மத்தியில் பயத்தை போக்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி இந்த படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த விஜய் சார் அவர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் மக்களுக்கும் மிகவும் நன்றி. திரும்பவும் மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் பல பேருக்கு வாழ்க்கையை தொடங்கி வைத்துள்ளது, நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க நன்றாக வந்ததற்கு விஜய் அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் ’மாஸ்டர்’ திரைப்படம் விஜய்சேதுபதி படம் என ரசிகர்கள் கூறி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன? என நிருபர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கேட்ட கேள்விக்கு, ‘நான்தான் ஏற்கனவே இந்த படம் விஜய் சார் அவர்களால் தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று சொல்லிவிட்டேனே, அதன் பிறகு இந்த கேள்வி அவசியமில்லாதது’ என்று சாதுர்யமாக கூறினார்

More News

துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்!

அமெரிக்காவின் இண்டியானோபோலிஸ் பகுதியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மாஸ் அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும்

அயலான் ரிலீஸ்? படக்குழு வெளியிட்ட தெறிக்கவிடும் அப்டேட்!

“இன்று நேற்று நாளை“ படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான்.

10 நாட்களை கடந்தும் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வரவேற்பு!

ளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது.

பிரபல நடிகை மகளின் வேற லெவல் டிரான்ஸ்பர்மேஷன்… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. அந்த அளவிற்கு அழகும் திறமையும் வாய்ந்தவர்.