அமைதியா கவனி, என் ஆட்டத்தை பார்: விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' டீசர்!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிய ‘மாமனிதன்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் சில பிரச்சனை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் விஜய் சேதுபதி தன் மகளிடம் தன்னுடைய ஆட்டோ டிரைவர் வேலை குறித்த கதையைக் கூறுவது போன்று ஆரம்பிக்கின்றது. மேலும் தனக்கு ஜோடியாக நடித்த காயத்ரியிடம் ’அமைதியாக கவனி, என் ஆட்டத்தை பார் என்று கூறும் காட்சிகளும் உள்ளன.
குடும்ப சென்டிமென்ட் காட்சிகளுடன் தொடங்கும் இந்த படம் அதன் பிறகு சில மர்மங்கள் உடன் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஆன்மீக காட்சிகளாக மாறும் என்பது இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது.
விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கும் இந்த படத்தில் லலிதா, குரு சோமசுந்தரம், அனிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை யுவன்சங்கர்ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.