விஜய் சேதுபதி மகனின் முதல் பட ரிலீஸ் எப்போது?


Send us your feedback to audioarticles@vaarta.com


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகி வருகின்றனர் என்பதும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் “பீனிக்ஸ் வீழான்' ” என்ற படம், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ள சூர்யா, இப்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், நாளை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் மகன் தனது முதல் படமே ரசிகர்களை கவரும் விதமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments