close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விஜய் சேதுபதி!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக நயன்தாரா, பிரபு உள்பட இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர்கள் டப்பிங் செய்தனர் என்ற அப்டேட்டை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜய் சேதுபதி தனது பகுதியின் டப்பிங் பகுதியை இன்று தொடங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.