close
Choose your channels

விஜய், விஜய்சேதுபதிக்கு தேதி குறித்த இயக்குனர்!

Friday, November 22, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ திரைப்படத்தை கைதி’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் மாளவிகா மேனன், சாந்தனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் டெல்லி படப்பிடிப்பில் முடிவடைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ’தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பின்போது விஜய்-விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் அந்தோணி வர்கீஸும் கலந்துகொள்வார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அனேகமாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’தளபதி 64’ படத்தில் கல்லூரிப் பேராசிரியராக விஜய் நடித்து வருவதாகவும் கல்வித் துறையில் நடைபெறும் ஊழலை வெளிப்படுத்தும் ஒரு கேரக்டரில் அவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய், விஜய்சேதுபதி என இரண்டு மாஸ் நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து உள்ளதால் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz