மணம் முடிந்த கையோடு விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Friday,December 03 2021]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் S.R. பிரபு தயாரிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மாநகரம்“. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை கத்ரினா கைஃப் நடிக்கவிருக்கிறார் என்பதும் போன்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.

“மெர்ரி கிறிஸ்துமஸ்“ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை “அந்தாதூன்“ பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவிருக்கிறார்.  கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் தற்போது டிசம்பர் 15 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌசால் திருமணம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ரிசார்டில் வரும் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 3 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த திருமண விழாவிற்கு பிறகு நடிகை கத்ரினா கைஃப் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ள “மெர்ரி கிறிஸ்துமஸ்“ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

பாலிவுட் சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருக்கும் “மும்பைகார்“ திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது “மெர்ரி கிறிஸ்துமஸ்“ படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். மேலும் “காந்தி டாக்ஸ்“ எனும் திரைப்படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். தமிழில் இவர் நடித்த “கடைசி விவசாயி“ திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது “காத்துவாக்குல ரெண்டு காதல்“, “மாமனிதன்“, “மைக்கேல்“, “விக்ரம்“, “யாதும் ஊரே யாவரும் கேளீர்“, “விடுதலை“ போன்ற படங்களில் அவர் இணைந்து நடித்து வருகிறார்.  

More News

பிக்பாஸில் இந்த வாரம் கமல்ஹாசனா? ரம்யா கிருஷ்ணனா? சற்றுமுன் கிடைத்த தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

இந்த வாரம் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

'மணி ஹெய்ஸ்ட்' முன்கதை சுருக்கத்தை எட்டு நிமிடங்களில் கூறிய தமிழ் நடிகர்!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த 'மணி ஹெய்ஸ்ட்' என்ற தொடரை பார்க்காதவர்கள் கிட்டத்தட்ட இருக்க மாட்டார்கள் என்பதும் மிகவும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வந்த 'மணி ஹெய்ஸ்ட்'

ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட 'ராஜாராணி 2' நடிகை: 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை!

'ராஜாராணி 2' சீரியலில் நடித்த நடிகை ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக இணையதளங்களில் வைரல் ஆன நிலையில்

டிரையல் ரூமுக்குள் நுழைந்த கேமிராமேன்: ஷிவானி நாராயணன் வைரல் புகைப்படம்!

ஷிவானி நாராயணனை டிரையல் ரூமுக்குள் கேமராமேன் நுழைந்து புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.