close
Choose your channels

வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு நிதியுதவி செய்த பிரபல தமிழ் நடிகர்!

Friday, September 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென மரணம் அடைந்தது திரை உலகையே அதிர வைத்தது என்பது தெரிந்ததே. கடந்த 15 நாட்களாக உடல் நலம் இல்லாமல் தனியார் மருத்துவமனையிலும் அதன்பின் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் காலமானார். அவருடைய மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று மதியம் வடிவேல் பாலாஜியின் இறுதிச் சடங்கு நடைபெறுவதை அடுத்து திரையுலகினர் பலர் நேரில் அவருடைய வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வடிவேல் பாலாஜி வீட்டிற்கு சென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் மேலும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி ஒரு குறிப்பிட்ட தொகையை நிதியாகவும் வழங்கியுள்ளார். வடிவேல் பாலாஜியின் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த குடும்பத்தினர்களுக்கு இந்த நிதியுதவி மிகப்பெரிய ஆறுதலை அளித்துள்ளது. இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு வடிவேல் பாலாஜி குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பிரபல நட்சத்திரங்கள் வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ய முன் வந்துள்ளதாகவும் ஒரு பிரபல நடிகர் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.