close
Choose your channels

அன்று ஒரு நாள் ஷில்பா விஜய்சேதூபதியுடன் தியாகராஜன் குமாரராஜா

Sunday, October 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் 25 படங்கள் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி பெரும்பாலான படங்களில் வித்தியாசமான வேடங்கள் ஏற்று தனது அபார திறமையை நிரூபித்து வருகிறார். இளவயது முதல் முதியவர் வரை எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் ஒருசில நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய்சேதுபதி தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார்.

'ஆரண்ய காண்டம்' என்ற ஒரே படத்தின் மூலம் உலகம் முழுவதும் பேசப்பட்ட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் பெண் வேடத்தில் விஜய்சேதுபதி உள்ள வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா ஒரு காட்சியை நடிக்க சொல்லி கொடுக்க பெண் வேடத்தில் இருக்கும் விஜய்சேதுபதி அதனை கவனத்துடன் கேட்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது.

அன்று ஒரு நாள் ஷில்பா உடன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா என்ற வாசகங்களுடன் விஜய்சேதுபதி பதிவு செய்துள்ள இந்த டுவீட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஏற்கனவே 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த வீடியோ மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.