முக ஸ்டாலினுக்கு விஜய்சேதுபதி வைத்த 14 கோரிக்கைகள்: நிறைவேற்றப்படுமா?

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.