close
Choose your channels

போடறதுன்னு ஆயிப்போச்சு, கைகால்ல போடாம கழுத்துல போடு.. 'இடம் பொருள் ஏவல்' டிரைலர்

Tuesday, October 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ’இடம் பொருள் ஏவல்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி நீண்ட காலமாகியும் ஒரு சில பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளை முடிவடைந்து வரும் நவம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒரு கிராமத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் தங்களது தொழிலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருவருக்கும் நந்திதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் திடீரென கொலை செய்யும் அளவுக்கு இருவரும் இறங்குகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனை என்ன? அவர்கள் போலீசில் சிக்கினார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளார். ராகுல் தருமன் ஒளிப்பதிவில், காசிவிசுவநாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சீனு ராமசாமியின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.